வெற்றிமாறன் படத்தில் டாப்லெஸ்ஸாக நடித்தது? - நடிகை ஆண்ட்ரியா அதிரடி

Report
423Shares

தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் பணிபுரிந்து வருகிறார்.

மேலும், தற்போது இவர் மாஸ்டர், அரண்மனை 3, மாளிகை உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வடசென்னை. அப்படத்தின் ஒரு காட்சியில் டாப்லெஸ்ஸாக நடித்திருப்பார் ஆண்ட்ரியா.

மேலும் அந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் லீக் ஆனாது. தற்போது ஆண்ட்ரியா இந்த காட்சியில் நடித்தது குறித்து ஒரு பேட்டியில் ஓப்பனாக பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது : “வடசென்னை படத்தில் படுக்கையறை காட்சி ஒன்றில் மிகவும் நெருக்கமாக நடித்தது தவறாக போய்விட்டது. மேலும், இதுபோன்ற காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகளே அதிகமாக வருகிறது” என வேதனையாக பேசியுள்ளார் ஆண்ட்ரியா.

15249 total views