தன்னை தோல்வி பட நடிகையென கிண்டலடித்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா..

Report
16Shares

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் 96. இப்படம் எதிர்பார்த்தை விட மிக பெரிய அளவில் வெற்றி அடைந்த்து.

இப்படம் தெலுங்கு, கன்னடமென பிற மொழிகளிலும் ரீமெக் செய்யப்பட்டது. மேலும், 96 திரைப்படத்தை இயக்கிய பிரேம்குமார் தெலுங்கில் ஜானு என்ற தலைப்பில் படத்தை இயக்கினார்.

ஆனால் தெலுங்கில் இப்படம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிளாப் ஆனாது, இதன்பின் நடிகை சமந்தாவை ரசிகர்கள் பிளாப் ஹீரோயின் என அழைக்க தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை சமந்தா பேட்டியளித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் “ஒரு ஹீரோவிற்கு தொடர்ந்து மூன்று படம் பிளாப் ஆனாலும் அவரின் நான்காவது திரைப்படத்தை ரசிகர்கள் சென்று பார்ப்பார்கள். அவர்களுக்கு அவர்களுடைய ஹீரோ திரையில் வந்தாலே போதும்.

ஒரு படத்தில் ஹீரோயின் எவ்வள்வு உழைத்தாலும் அது பெரிதாக பேசப்படுவதில்லை. ஆனால், ஒரு பெரிய ஹீரோ திரையில் நடந்து வந்தாலே போதும் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள்” என சமந்தா கூறியுள்ளார்.

1144 total views