பிரபல நடிகர் அர்ஜூனின் மகளுக்கு கொரோனா தொற்று! ரசிகர்களுக்காக வெளியிட்ட பதிவு இதோ

Report
89Shares

தமிழ், கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தவர் நடிகர் அர்ஜூன். ஆக்‌ஷன் கிங் என அவரை எல்லோரும் அழைப்பதுண்டு. அண்மையில் அவரின் நெருங்கிய உறவினர் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் இளம் வயதில் காலமானது பெரும் அதிர்ச்சியே.

அதே வேளையில் அவரின் உறவினர்கல் துருவ் சார்ஜா மற்றும் அவரின் மனைவி பிரேரனா ஷங்கார் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர்.

இந்நிலையில் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருகிறாராம்.

இதனால் அவர் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறும், முகக்கவசம் அணியுமாறும், விரைவில் உடல் நலம் குறித்து பதிவிடுவதாக கூறியுள்ளார்.