நடிகை காஜல் அகர்வாலின் திருமணம் எங்கு எப்போது நடைபெறுகிறது தெரியுமா? வெளியான புதிய தகவல் இதோ..

Report
4Shares

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கியவர், மேலும் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர்.

இவர் தென்னிந்திய அளவில் அணைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடைசியாக இவர் தமிழில் கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார், அதனை தொடர்ந்து தற்போது காஜல் இந்தியன் 2 மற்றும் ஹே சினமிகா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை காஜல் கவுதம் கிட்சலு என்பவரை வரும் அக்டோபர் 30 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்து இருந்தார்.

மேலும் இவர்களின் திருமணத்தை மிக பெரிய அளவில் நடத்த திட்டமிருந்தனர் அவர்களின் குடும்பத்தினர், ஆனால் நடிகை காஜல் மும்பையில் உள்ள தனது வீட்டில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் முன் சிம்பிளாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.