விமான விபத்தில் இறந்த நடிகையாக நடிக்கப்போவது இவர் தானாம்! எல்லோரையும் கவர்ந்த அந்த ஹீரோயின்

Report
25Shares

தமிழில் பொன்னுமணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா. பின்னர் ரஜினிக்கு ஜோடியாக அருணாச்சலம், படையப்பா படங்களில் நடித்திருந்தார்.

பின் சத்யராஜ் உடன் சேனாதிபதி, கமலுடன் காதலா படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள அவர் ஹிந்தியில் அமிதாப் பச்சனுடனும் நடித்துள்ளார்.

கடந்த 2004 ல் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய விமானத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அவரின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகளை நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் சௌந்தர்யாவாக நடிக்க சாய்பல்லவியுடன் பேட்டு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் சாய் பல்லவிக்கு நல்ல மார்க்கெட் உள்ளது குறிப்பிடத்தக்கது.