60 வயது நடிகருக்கு ஜோடியான ஆர்யாவின் மனைவி சாயிஷா, வெளியான புதிய தகவல்..

Report
28Shares

தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர் பாலகிருஷ்ணா, இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சிம்ஹா, லெஜண்ட் என இரண்டு திரைப்படங்களும் பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் அடுத்ததாக இவர் நடிக்கவுள்ள திரைப்படத்தில் இரண்டு நடிகைகள் தேவைப்படுகிறதாம், இதனால் முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் படக்குழுவினர்.

இந்நிலையில் அதில் பிசாசு படத்தின் நாயகி பிரயாகா நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அவருக்குத் தேதிகள் பிரச்சினைகள் காரணமாக படத்திலிருந்து விலகிவிட்டார்.

இதனிடையே தற்போது அவருக்குப் பதிலாக நடிகை சாயிஷா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தனது காதல் கணவர் ஆர்யாவுடன் டெட்டி திரைப்படத்திற்கு பிறகு, நடிகை சாயிஷா ஒப்பந்தமாகியுள்ள திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.