சாமியாராக போன பிக்பாஸ் நடிகைக்கு திடீர் கல்யாணம்! கணவர் இவர் தான் - போட்டோ இதோ

Report
113Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானோர் பலர். அதன் மூலம் வாழ்க்கையை மெருகேற்றி பட வாய்ப்புகளை பெற்று உயர்ந்தவர் வெகு சிலரே. அப்படியாக மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் நடிகை சனா கான்.

பாலிவுட் சினிமா நடிகையான இவர் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 6 கலந்து கொண்டு இறுதி வரை சென்று ரன்னர் ஆக வெற்றி பெற்றார். பின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தமிழில் ஈ பட பாடலில் அறிமுகமாகி பின் சிலம்பாட்டாம், தம்பிக்கு எந்த ஓரு, ஆயிரம் விளக்கு, தலைவன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

விஷால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான அயோக்கிய படத்தில் நடனமாடியிருந்தார். நடிப்பே வேண்டாம் என ஆன்மீகத்தில் இறங்கியவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி முஃப்தி அனாஸ் என்பவரை சூரத்தில் இன்று திருமணம் செய்துகொண்டார்.