ரகசிய திருமணம் செய்து கொண்ட சீரியல் சினிமா நடிகை! மாப்பிள்ளை இவர் தான் - கல்யாண புகைப்படம் வந்தாச்சு!

Report
70Shares

விஜய் நடித்த சர்கார் படம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவோம். தேர்தல் களத்திலும் ஓட்டு உரிமை சட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் ஆணையமே நடவடிக்கை எடுத்தது.

அப்படத்தில் நடித்த பெங்காலி சினிமா நடிகை பாப்ரி கோஷ்க்கு நேற்று தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனராம். கொரோனா பரவல் காரணமான திருமணத்திற்கு யாரையும் அழைக்காமல் எளிமையாக நடத்தி முடித்துவிட்டார்களாம்.

விஜய்யுடன் பைரவா, சர்கார் படங்களில் நடித்த இவர் அஜித்துடன் விஸ்வாசம், சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் பாப்ரி கோஷ் சித்தி 2, மகராசி என டிவி சீரியல்களும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.