சித்ராவின் கைப்பையில் கிடைத்த கஞ்சா.. தற்கொலை வழக்கில் சிக்கிய திடுக்கிடும் தகவல்

Report
183Shares

பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக நடித்ததன் மூலம் பட்டி, தொட்டி எங்கும் பிரபலமான நட்சத்திரம், சின்னத்திரை நடிகை விஜே சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் இந்த புகாரின் அடிப்படையில் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்ய ஸ்ரீ என்பவர், சித்ராவின் குடும்பத்தினர், மாமனார், மாமியர், கணவர் ஹேமந்த், சக நடிகர், நடிகைகள், நண்பர்கள், ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், சித்துவின் உதவியாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் அடிப்படையில் 16 பக்க அறிக்கையை தயார் செய்த கோட்டாட்சியர் திவ்ய ஸ்ரீ கடந்த வாரம் அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஏற்கனவே சித்ராவின் மரணம் குறித்து பல திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அன்று இரவு அவர் கைப்பையில் இருந்து 150 கிராம் கஞ்சாவையும், ஒரு கஞ்சா நிரப்பப்பட்ட சிகரெட்டையும் போலீசார் கைப்பற்றியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.