நடிகர் சூர்யாவின் படத்தில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன், வெளியான அதிகாரப்பூர்வமான தகவல் இதோ..

Report
340Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று கடந்த 17 தேதி முடிவடைந்தது, அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஆரி அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.

அவருக்கு அடுத்து பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோராஜ் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர், ஆரிக்கு பரிசு தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும் இந்த பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு பைனல்ஸ் சென்று நான்காவது இடம் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் அடுத்ததாக நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் புதிய இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் இதனை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன்..