பாடகிகள் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்ளும் சங்கர் மகள்!! வாய்ப்பை தட்டிப்பறிக்கும் நடிகை அதிதி சங்கர்..
இயக்குனர் சங்கர் மகளாக விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அதிதி சங்கர். டாக்டர் படிப்பை முடித்து மருத்துவராகாமல் நடிப்பின் மேல் ஆசைப்பட்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். முதல் படத்திலேயே நடிகையாக மட்டும் நடிக்காமல் பாடகியாகவும் பாடி கலக்கினார்.
விருமன் படத்தில் மதுரவீர அழகு பாடல் அவர் குரலில் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் பரவி பிரபலமானது. ஆனால் அப்பாடலை முதலில் இசையமைப்பாளர் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமியை தான் பாட வைத்திருந்தார். அதன்பின் அதிதி சங்கரின் குரலிலும் பாட வைத்து கடைசியில் ராஜலட்சுமி குரலை நீக்கி அதிதி குரலை ஓகே செய்து படத்தில் வைத்துள்ளனர்.
இந்த விசயத்தால் பாடகியின் வாய்ப்பை தட்டிப்பறித்த அதிதி என்று விமர்சனம் எழுந்தது. ஆனால் இதுபற்றி நான் வருத்தப்படவில்லை என்றும் ராஜலட்சுமி கூறியிருந்தார்.
அதேபோல் தான் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் நடந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் குரலில் வண்ணாரப்பேட்டையில என்ற பாடல் உருவாகி பிரபலமானது. ஆனால் முதல் அப்பாடலை, பிரபல பாடகி மீனாட்சி இளையராஜா தான் பாடியிருக்கிறாராம். ஆனால் வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் இருந்த மீனாட்சிக்கு ஏமாற்றம் தான் மிச்சமாம்.
அவர் குரலை நீக்கிவிட்டு அதிதியின் குரலுக்கு ஓகே சொல்லியதால் தான் வருத்தப்பட்டதாக மீனாட்சி இளையராஜா கூறியிருக்கிறார். இந்த விசயத்தால் ஏழையின் வயிற்றெறிச்சலை சம்மாதிக்கிறார் அதிதி என்று விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.
அதிதி ஒரு படத்தில் கமிட்டாகினால் அப்படத்தில் பாடவும் வாய்ப்பு கேட்கும் பழக்கம் இருப்பது அவரே பேட்டியில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.