ஒரேவொரு போஸ்ட்!! வருஷம் முடியும் நேரத்தில் சூப்பர் ஸ்டாருக்கு இப்படியா நடக்கணும்
2022 ஆம் ஆண்டு இன்னும் 14 நாட்களில் முடியப்போகிறது. இந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அந்த குறையை நீக்க சூப்பர் ஸ்டார் நடித்த பாபா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
ரஜினிகாந்த் ரசிகர்
வெளியான ஒரு வாரத்தில் 6.6 கோடியளவில் வசூலித்திருக்கிறது பாபா படம். இது ரஜினிகாந்தின் பிறந்தநாள் ட்ரீட்டாக அமைந்தது. 72வது பிறந்தநாளை கடந்த 12 ஆம் தேதி கொண்டாடிய ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க வீட்டுக்கு வெளியில் கூட வரவில்லை. தலைவனை பார்க்க போயஸ் கார்டன் வீட்டில் பல ரசிகர்கள் காத்திக்கிடந்தனர்.
ஆனால் ரஜினிகாந்த் வீட்டில் இல்லை என்று கூறி அவரது மனைவி லதா வெளியில் வந்து கூறினார். அப்படி கூறியநிலையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, தன் மகன்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களோ வீட்டில் தலைவர் இருந்தும் இல்லை என்றாரே லதா என்று கடுமையாக கோபப்பட்டுள்ளனர்.
அறிக்கையும் டிவிட்டும்
அதேபோல் தன்னை வாழ்த்திய பலருக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த் ரசிகர்களை மறந்துவிட்டாரே என்றும் அண்ணாமலைக்கு முதல் பகுதியிலும் உதயநிதி ஸ்டாலின் பெயரை இரண்டம் பகுதியில் போட்டும் இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதற்கான விளக்கத்த்தை ரஜினி ரசிகர்கள், உதயநிதி ஸ்டாலின் கலைக்குடும்பம் என்பதால் தான் அரசியல் பிரமுகர் இடத்தில் அவரது பெயர் இடம்பெறவில்லை என்று கூறினர். ஆனால் அந்த அறிக்கை வெளியிட்ட அடுத்த சில நாட்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிவி கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கும் ரஜினிகாந்த் வாழ்த்துக்கூறியும் ஒரு டிவிட் செய்திருந்தார். பல விசயங்களை பார்த்திராத ரஜினிகாந்த் உதயநிதிக்கு வாழ்த்தாமலே இருந்திருக்கலாமே என்றும் வாரிசு அரசியலை ஆதரிக்கிறீர்களே என்ற விமர்சனமும் முன்வைத்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு அண்ணாத்த படம் தோல்வியில் இருந்து தற்போது வரை ரஜினிக்கு 2022 ஆண்டு ராசியில்லாமலே போய்விட இந்த அறிக்கையும் டிவிட்டும் நீடித்திருக்கிறது.