34 வயதுதான், சொத்து மட்டும் இத்தனை கோடி!! தளபதி69 பட நாயகியின் சொத்து மதிப்பு..

Pooja Hegde Indian Actress Tamil Actress Net worth Thalapathy 69
By Edward Oct 15, 2024 02:30 AM GMT
Edward

Edward

Report

தளபதி69 பட நாயகி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோட் படத்தினை தொடர்ந்து தன்னுடைய கடைசி படமான தளபதி 69வது படத்தில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

34 வயதுதான், சொத்து மட்டும் இத்தனை கோடி!! தளபதி69 பட நாயகியின் சொத்து மதிப்பு.. | 34 Age Thalapathy69 Actress Pooja Hegde Networth

இப்படத்தின் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது.

பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு கமிட்டாகி பூஜையில் கலந்து கொண்டனர். பல கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டே, சுமார் 6 கோடி ரூபாய் சம்பளமாக நடிகை பூஜா ஹெக்டே வாங்கியிருக்கிறாராம்.

சொத்து மதிப்பு

இதற்குமுன் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவுக்கு சம்பளமாக 3.5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி, தன்னுடைய 34 வயதை எட்டிய பூஜா ஹெக்டே, எவ்வளவு சொத்துக்கள் சேர்த்து வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

34 வயதுதான், சொத்து மட்டும் இத்தனை கோடி!! தளபதி69 பட நாயகியின் சொத்து மதிப்பு.. | 34 Age Thalapathy69 Actress Pooja Hegde Networth

12 வருட சினிமா வாழ்க்கையில் 50 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கிறார் பூஜா ஹெக்டே.

மேலும் மும்பையில் 6 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடும் சொந்தமாக இரண்டு கோடி மதிப்பில் Porsche, 60 லட்சம் ரூபாயில் ஜாகுவார், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் Audi Q7 காரும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.