4300 கோடி ரூபாய் சொத்து லீமா ரோஸ் அடித்த பல்டி!! அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு..

ADMK Edappadi K. Palaniswami Gossip Today Tamil Nadu Election 2026
By Edward Apr 13, 2026 11:30 AM GMT
Report

திருச்சி மாவட்டத்தின் முக்கிய தொகுதியாக இருக்கும் லால்குடியில் தற்போது அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ல நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ் மற்றும் அக்கட்சியின் தலைமைக்கு இடையே ஏற்பட்டுள்ள புகைச்சல் தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்த வேகத்தில், அவருக்கு உடனடியாக கிடைத்த அங்கீகாரம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

4300 கோடி ரூபாய் சொத்து லீமா ரோஸ் அடித்த பல்டி!! அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு.. | 4300 Cr Candidates Sudden Reverse Plan Shocks Eps

லீமா ரோஸ்

பொதுவாக ஒரு கட்சியில் இணைந்தவுடனே ஒருவருக்கு அவர் விரும்பும் தொகுதியை ஒதுக்குவது என்பது அரிதான விஷயம். ஆனால் லீமா ரோஸ் முதலில் ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை தொகுத்தியை கேட்டார். ஆனால் அங்கு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் அவருக்கு சாதகமாக இல்லை.

அதனைதொடர்ந்து தான் திருச்சி லால்குடி பக்கம் திரும்பினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பெரிய தயக்கமின்றி அவருக்கு அந்த தொகுதியை கொடுத்தார்.

அதற்கு காரணம் தேர்தல் நேரத்தில் சுமார் 10 தொகுதிக்கான செலவுகளை தானே ஏற்றுக்கொண்டாராம். சீட் உறுதியானப்பின் நிதி விவகாரத்தில் லீமா ரோஸ் காட்டும் தயக்கம் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ள்து.

4300 கோடி ரூபாய் சொத்து லீமா ரோஸ் அடித்த பல்டி!! அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு.. | 4300 Cr Candidates Sudden Reverse Plan Shocks Eps

பணப்பரிமாற்றத்தில் சிக்கல், தேர்தல் முடிந்தப்பின் செலவு செய்த தொகையை தரமுடியும் என்றும் அவர் தரப்பில் இருந்து வரும் பதில்கள் தலைமையை திகைத்துள்ளது.

அதிமுக

அரசியலை பொறுத்தவரை வாக்குறுதி என்பது வேறு சொல் இல்லாமல் அது ஒரு செயல் வடிவமாக இருக்க வேண்டும். நிதி மேலாண்மை என்பது வெற்றியை தேர்தல் தேரத்தில் தீர்மானிக்கும் காரணி. லீமா ரோஸின் இந்த நிலைப்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

4300 கோடி ரூபாய் சொத்து லீமா ரோஸ் அடித்த பல்டி!! அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு.. | 4300 Cr Candidates Sudden Reverse Plan Shocks Eps

இதற்கு காரணம் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவியான லீமா ரோஸ், தமிழ்நாட்டின் அதிக சொத்து மதிப்புடைய வேட்பாளராவார். 139 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை உள்ளிட்ட சொத்துக்கள் இருக்கிறது.

கணவர் பெயரில் ரூ.3262 கோடி மதிப்பு சொத்தும், வேட்பாளர் பெயரில் ரூ. 909 கோடியில் நிலம், கட்டடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களும் உள்ளதாக பிராமணப்பத்திரத்தில் தெரிவித்ததுதான்.

இருந்தாலும் வேட்பாளரின் நிதி வலிமையை மட்டும் நம்பி தொகுதி ஒதுக்கீடு செய்வது சில நேரங்களில் கட்சியின் வியூகத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இதனால் லீமா ரோஸுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஒருபக்கம் இருந்தாலும் தேர்தலுக்கு பின் லீமா ரோஸுக்கு கட்சி தலைமையின் அணுகுமுறை கடுமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.