4600 கோடி சொத்து!! ஷாருக்கானின் தோழி!! இந்தியாவின் பணக்கார நடிகை யார் தெரியுமா
பணக்கார நடிகை யார்
இந்தியளவில் நடிகர்களுக்கு அடுத்து டாப் நடிகைகளின் சம்பளமும் சொத்து மதிப்பும் அதிகளவில் கவனிக்கப்படும். அப்படி இந்தியளவில் ஐஸ்வர்யா ராய், தீபிகா, ஆலியா பட் போன்ற நடிகைகளின் முகம் அனைவருக்கும் வரும். அதேபோல் தென்னிந்திய சினிமாவில் நயன் தாரா, சமந்தா, திரிஷா உள்ளிட்ட டாப் நடிகைகளின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தேடுவார்கள்.
ஜூஹி சாவ்லா
அந்தவகையில் அவர்களையே மிஞ்சும் வகையில் ஒரு நடிகை 4 ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்து மதிப்பினை வைத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தான்.
சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற ஜூஹி ஐபிஎல் அணி, உம்ஸ்தா நிறுவனத்தில் பங்குதாரர், திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் இணை உரிமையாளர் போன்ற தொழில்கள் மூலம் சொத்துக்களை உயர்த்தி வருகிறார்.
4600 கோடி
ஷாருக்கானின் நெருங்கிய தோழியான ஜூஹி சாவ்லாவுக்கு 4600 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் 860 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளார்.
3-வதாக நடிகை பிரியங்கா சோப்ரா 650 கோடியும், 4வது இடத்தில் ஆலியா பட் 500 கோடி சொத்தும் வைத்துள்ளனர்.
தீபிகா படுகோன் 500 கோடியும், கரீனா கபூர் 485 கோடியும், அனுஷ்கா சர்மா 255 கோடியும், மதுரி தீட்சித் 250 கோடியும், கஜோல் 240 கோடியும், கத்ரீனா கைஃப் 225 கோடியும் வைத்து டாப் 10 இடத்தில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு பின் தான் தென்னிந்திய நடிகைகள் நயன் தாரா, திரிஷா, சமந்தா இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.