47 வயதுன்னா நம்ம முடியுதா!! ஸ்டன்னிங் லுக்கில் நடிகை ஜோதிகா வெளியிட்ட புகைப்படங்கள்..
சூர்யா - ஜோதிகா
தென்னிந்திய சினிமாவின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக திகழ்ந்து வருபவர்கள் தான் சூர்யா - ஜோதிகா ஜோடி. தங்களின் கரியரின் ஆரம்பத்திலேயே காதலிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் அவர்களின் காதலுக்கு சூர்யாவின் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது.

இருந்தாலும் திருமணம் செய்தால் ஜோதிகாவுடன் தான் என்ற குறிக்கோளுடன் அப்பாவின் சம்மதத்துடன் பல ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டார் சூர்யா. திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகி குழந்தை, குடும்பம் என்று இருந்த ஜோதிகா பல ஆண்டுகள் கழித்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
47 வயது ஜோதிகா
தற்போது பாலிவுட்டிலும் நடித்து வரும் ஜோதிகா, 47 வயதிலும் குறையாத அழகிலும், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்தும் வருகிறது. சமீபத்தில் நடந்த அமேசான் பிரைம் நிகழ்ச்சியில் ஸ்டன்னிங் லுக்கில் சென்றுள்ளார். அந்த ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.







