நடித்தால் முத்தக்காட்சி தான்!! கமல்ஹாசனை ஒதுக்கிய 3 ஹீரோயின்கள் 2 ஹீரோக்கள்..

Kamal Haasan Raghuvaran Nadhiya Nayanthara Roja
By Edward Jan 31, 2024 09:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராகவும் உலக நாயகனாகவும் திகழ்ந்து வரும் கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தில்  படம் என்றால் அவருடன் நடிக்க பலர் வரிசையில் நிற்பார்கள். ஆனால் 80-களில் இருந்தே ஒருசில நடிகைகள் கமல் ஹாசனுடன் நடிக்க வேண்டாம் என்று கூறி வந்தனர். அதற்கு காரணம் அவருடன் நெருக்கமாக நடிக்க வேண்டும் என்ற நிற்பந்தம் தான். ஆனால், கோலிவுட்டில் இருந்த சில முக்கிய புள்ளிகளாக இருந்த நடிகர்கள் நடிகைகள், கமல் ஹாசனுடன் ஒருமுறை கூட இணையாமல் ஒதுக்கி வைத்துள்ளனர். அந்த 5 பேர் லிஸ்ட்டை பார்ப்போம்..

நடித்தால் முத்தக்காட்சி தான்!! கமல்ஹாசனை ஒதுக்கிய 3 ஹீரோயின்கள் 2 ஹீரோக்கள்.. | 5 Famous Actors Not Acted With Kamal Haasan Movies

நடிகர் ரகுவரன்

90-ஸ் காலக்கட்டத்தில் டாப் வில்லன் நடிகராக திகழ்ந்து அனைவரையும் ஈர்த்தவர் நடிகர் ரகுவரன். கேரக்டருக்கு ஏற்ப குரலை மாற்றி நடிக்கக்கூடிய ரகுவரன், நாயகன் படத்தில் நடிகர் நாசர் நடித்திருந்த ரோலில் நடிக்க வேண்டியிருந்ததாம். ஆனால் அந்த கேரக்டரில் தனக்கான முக்கியத்துவம் இல்லை என்பதற்காக நாயகன் படத்தில் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் ரகுவரன். அதன்பின் கமல் படத்தில் இணைந்து நடிக்க முடியாமல் போயுள்ளது.

விவேக்

சின்ன கலைவாணர் விவேக், கமல் ஹாசன் படத்தில் இணைந்து பணியாற்றியதே இல்லை. அதற்கு காரணம் உச்ச காமெடி நடிகர்களை தன் படத்தில் இணைத்துக் கொண்டால் அவர்களின் காட்சிகள் அதிக பங்கு இருப்பதாக கமல் நினைப்பாராம். அதனால், உச்ச நடிகர்களை உதறிவிட்டு டெல்லி கணேஷ், வையாபுரி, ரமேஷ் கண்ணா போன்ற நடிகர்களை நடிக்க வைப்பாராம் கமல்.

30 ஆண்டுகளாக இருவரும் இணையாமல் இருந்த நிலையில், இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக இந்தியன் 2 படத்தில் முழுமையாக நடிக்கமுடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியின் இறுதி சடங்கை கூட சொந்த ரத்தத்தை பார்க்கவிடாமல் செய்த இளையராஜா..நடு ரோடுத்தில் கதறிய கங்கை அமரன்

மனைவியின் இறுதி சடங்கை கூட சொந்த ரத்தத்தை பார்க்கவிடாமல் செய்த இளையராஜா..நடு ரோடுத்தில் கதறிய கங்கை அமரன்

ரோஜா, நதியா, கனகா

90-களில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ரோஜா, கமல ஹாசனுடன் ஒருமுறை கூட நடிக்கவில்லை. அவருடன் நடித்தால் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும். அதில் தனக்கு விருப்பம் கிடையாது, அதனால் தான் கமல் படவாய்ப்பை ஒதுக்கியதாக நடிகை ரோஜாவே ஓப்பனாக கூறியிருந்தார்.

கமலுடன் சேர்ந்து நடித்தால் நெருக்கமான மற்றும் முத்தக்காட்சியில் நடிக்க நேரிடும் என்பதால் நடிகை நதியாவும் அவர் படங்களை ஒதுக்கி இருக்கிறார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ரொமான்ஸ் செய்த நடிகை கனகா, மற்ற நடிகைகள் கூறியது போலவே கமலுடன் நடித்தால் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்ற காரணத்தையும் கூறி அவரை ஒதுக்கி வைத்திருக்கிறார்.

நடிகை நயன்தாராவின் 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஓகே சொல்லிவிட்டு நடித்தவர், கமல் ஹாசனை மட்டும் ஒதுக்கி வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.