13 வருஷதுக்கு முன் தனுஷுடன் நடந்த சம்பவம்!! சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பேச்சு..
70ஆவது ஃபிலிம்ஃபேர்
70ஆவது ஃபிலிம்ஃபேர் விருது பிப்ரவரி 21 ஆம் தேதி நேற்று நடைபெற்றது. பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயனுக்கு அமரன் படத்திற்காக கொடுக்கப்பட்டது. நடிகை சிம்ரன் விருதை வழங்கிய நிலையில், சிவகார்த்திகேயன் விருதை வாங்கி பேசியிருக்கிறார்.

அதில், இந்த ஃபிலிம்ஃபேர் விருது தான் என்னுடைய முதல் விருது. நான் முதன்முதலாக இவ்விழாவிற்கு தனுஷ் சாருடன் தான் வந்தேன். சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் வந்தேன். அவர் தான் சும்மா வா..ஜாலியாக போய்ட்டு வரலாம் என்று என்னை அழைத்து வந்தார். அப்போது எனக்கு 2வது வரிசையில் தான் சீட் ஒதுக்கப்பட்டது.
இன்று முதல் வரிசையில் உட்கார்ந்து இந்த விருதை வாங்க 13 ஆண்டுகளாகியுள்ளது. அமரன் படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது அமரன் எனக்கு தொடர்ந்து விருது கொடுத்துக்கொண்டே இருக்கும் என்று சொன்னேன். அதேபோல் இந்த படம் இன்னும் எனக்கு கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

அமரன் படம்
அதற்கு காரணமான முகுந்த் வரதராஜன் சாரின் குடும்மத்திற்கு நன்றி. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி. இப்படத்திற்காக கமல் ஹாசன் சாரின் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கிருந்த எக்கச்சக்கமான ஃபிலிம்ஃபேர் விருதுகளை பார்த்தேன்.
அப்போது அமரனுக்காக எனக்கும் கிடைக்கும் என்று நினைத்தேன், இன்று அது கிடைத்திருக்கிறது. நான் மிகவும் சீரியஸான மனிதன் இல்லை, ஜாலியான ஆள்தான். ஆனால் அமரன் மாதிரி ஒரு சீரியஸான படத்தில் நடித்தப்பின் ஏன் இப்படி செய்தாய்? என்று யாரும் கேட்கவில்லை. எல்லாரும் பாராட்டினார்கள், அதற்காக அனைவருக்கும் நன்றி.
முக்கியமாக என் ரசிகர்களுக்கு நன்றி, எவ்வளவு பேர் என்னை அடித்து துவைத்தாலும் மிதித்தாலும் என்னை தொடர்ந்து தூக்கி மேடையில் நிற்க வைத்துக் கொண்டே இருப்பது நீங்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவாண்ணா இன்று ஃபிலிம்ஃபேர் அவார்ட் உடன் நிற்கிறேன் என்று கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.