கவர்ச்சியில் துவம்சம் செய்த முக்கிய நடிகைகள்!! விஜய்யுடன் எக்குத்தப்பாய் ஆட்டம் போட்ட காதல் நடிகைகள்..

Vijay Mumtaz Namitha Sanghavi Silk Smitha
By Edward Mar 11, 2023 07:00 PM GMT
Report

பொதுவாக சினிமாத்துறையில் தற்போது கிளாமர் மற்றும் நெருக்கமான காட்சிகள் என்பது முக்கியமானதாகிவிட்டது. அப்படி ஆரம்பத்தில் இருந்து சினிமாவில் அறிமுகமானது முதல் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரபலமான நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் சில முக்கிய நடிகைகள் இருப்பதை தற்போது பார்ப்போம்.

சில்க் ஸ்மிதா

70, 80, 90களில் இளசுகளின் கனவுக்கன்னியாக திகழ்ந்து நடித்த பல படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சியையும் காட்டி நடித்து பிரபலமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. அப்படி முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கவர்ச்சி புயலாக மாறி நடித்தார். நடிகர் விஜய்யின் கோயம்பத்தூர் மாப்பிள்ளை படத்தில் அண்ணாமலை தீபம் என்ற பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருந்தார்.

ஜெயமாலினி

தென்னிந்திய மொழிப்படங்கள் இந்தி போன்ற மொழிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகை ஜெயமாலினி கவர்ச்சிக்கன்னியாகவே ஆரம்பத்தில் இருந்து திகழ்ந்து வந்தார். ஜெயமாலினி படத்தில் இருந்தாலே போது வரிசைக்கட்டி வரும் ரசிகர்கள் பட்டாளம் என்று கூட அப்போதில் இருந்து கூறுவார்கள். அப்படியொரு மார்க்கெட்டை தக்கவைத்திருந்தார் நடிகை ஜெயமாலினி.

ரஞ்சிதா

தமிழில் ஜெய்ஹிந்த், கர்ணன், தோழர் பாண்டியன், அமைதிப்படை உள்ளிட்ட பல படங்களில் நடித்து 90ஸ் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தார் நடிகை ரஞ்சிதா. கிளாமரில் சற்று தூக்கலாகவும் நடிக்க ஆரம்பித்த ரஞ்சிதா தற்போது ஆன்மீக வழியாக சென்றுவிட்டார்.

மும்தாஜ்

தமிழில் கிளாமர் குயினாக 90ஸ் காலக்கட்டத்தில் உச்சத்தில் இருந்தவர்களில் ஒருவர் நடிகை மும்தாஜ். நடித்த பல படங்களில் எல்லையில்லா கிளாமரில் அசத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். நடிகர் விஜய்யுடன் குஷி படத்தில் அவருடன் நெருக்கமாக கவர்ச்சி பாடலுக்கும் ஆட்டம் போடிருப்பார்.

நமீதா

முன்னணி நடிகர்கள் சரத்குமார், விஜயகாந்த், விஜய் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்ததோடு கவர்ச்சியில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தவர் நடிகை நமீதா. மச்சான் என்ற வார்த்தையை எங்கு சென்றாலும் பயன்படுத்திய நமீதா, அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய்யுடன் கிளாமர் ஆட்டம் போட்டிருப்பார்.

சங்கவி

நடிகர் அஜித்துக்கு அமராவதி படத்தில் நடித்து அறிமுகமாகிய நடிகை சங்கவி இரண்டாம் படமான ரசிகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அவருடன் நெருக்கமாகவும் இருந்தார். விஜய்யுடன் பல காட்சிகள் மற்றும் பாடல்களில் எல்லைமீறிய காட்சியில் ஆட்டம் போட்டு வாய்ப்பிளக்கவும் வைத்து வருகிறார்.