48 வயதில் திருமணமாகாத நடிகையின் இந்த ஆசை! நடிகை கனகாவின் தற்போதைய நிலை..
தமிழ் சினிமாவில் 80களில் கரக்காட்ட காரன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவரானால் நடிகை கனகா. இதையடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.
இதையடுத்து உடல் நிலை குறைவால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். சமீபத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் புகைப்படம் வெளியானதை தொடர்ந்து கனகா ஒரு வீடியோ மூலம் ரசிகர்களுடன் பேசியுள்ளார். அதில் நான் சினிமாவில் அறிமுகமாகி 32 வருடங்கள் ஆகிறது. தற்போது 50 வயதான நிலையில் இப்போது இருக்கும் சினிமா மாறிவிட்டது. மீண்டும் நடிக்க ஆசையாக இருக்கிறது. பலவற்றை கற்றுக்கொள்ளவேண்டும்.
மேக்கப், சிகை அலங்காரம், முகபாவனை, டிரஸ், பேசிறது சிரிக்கிறது என அனைத்தையும் கற்றுகொள்ள வேண்டும். சின்ன வயதில் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வதற்கும் இப்போது கற்றுக்கொள்வதற்கு நிறைய வித்யாசம் இருக்கிறது. இனிமேல் நான் எப்போதும் பேசுவேன். விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வேன் என்று க்யூட்டாக பேசியுள்ளார்.