90ஸ் கிட்ஸ்கள் கொண்டாடிய ராசி பலன் தொகுப்பாளினியா இது!! அப்படியே இருக்காங்களே..
90-ஸ் காலக்கட்டத்தில் காலையில் தொலைக்காட்சியில் ஆன் செய்தால் ராசி பலன் சொல்லும் அந்த விசாலமான நடிகைக்கு ரசிகர்கள் ஏங்கி கிடப்பார்கள். அப்படியான முகத்தோரணையில் பொலிவுடன் ராசி பலனை சொல்லி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியவர் தான் விஜே விஷாலக்ஷி ஈஸ்வரன்.

90ஸ் கிட்ஸ்களின் விருப்பத்துக்குரிய பிரபலம் என்ற இடத்தை பிடித்த விஷாலக்ஷி, திரை விமர்சனத்தையும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கூறுவார். அப்படி ரசிகர்களை கவர்ந்த விஷாலக்ஷி திருமணம் செய்து வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் இந்தியாவிற்கு வந்து பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அதே பொலிவுடன் இந்த வயதில் காணப்படும் விஷாலக்ஷி, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மீண்டும் கம்பாக் கொடுப்பேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் வருவேன். ஐடியில் வேலை பார்த்ததால் வேலைவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டேன்.
அதுதான் நான் இங்கிருந்து போக காரணம் என்று கூறியிருக்கிறார். தற்போது அதே அழகில் அப்படி இருக்கும் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.