இனி என்வழி தனிவழிதான்! கார்த்திக் மகனை வைத்து ரிஸ்க் எடுக்கபோகும் முருகதாஸ்!

தமிழ் சினிமாவில் தல அஜித்தை வைத்து முதன் முதலில் இயக்க ஆரம்பித்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். சமீபத்தில் நடிகர் விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கியப்பின் மீண்டும் விஜய்யிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் முருகதாஸ்.

ஆனால் விஜய் வேண்டாம் என்று உதறித்தள்ளியுள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடன் பணியாற்றிவர்களுக்கு உதவும் வண்ணம் படங்களை வாங்கி கொடுப்பார்.

தற்போது அவருடன் உதவி இயக்குநராக பணியாற்றி நெருக்கமாக இருந்த பொன்குமார் என்பவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். பல கோடி செலவில் நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக்கை வைத்து தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்