ஜோதிகா படிப்பறிவு இல்லாதவர்.. மோசமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்திய பாடகி
ஜோதிகா - சூர்யா
பெரும் எதிர்பார்ப்புடன் சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கங்குவா. பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது வைக்கப்பட்ட நிலையில், சிலர் மோசமான வகையிலும் படத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு பல எதிர்முறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா கங்குவா படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
சர்ச்சை பேச்சு
இந்நிலையில், தற்போது ஜோதிகாவின் இந்த கருத்திற்கு பின்னணி பாடகி சுசித்ரா அவர் பங்கிற்கு சில மோசமான கருத்துக்களை கூறி ஜோதிகா குறித்து பேசியிருக்கிறார்.
அதில், "ஜோதிகாவும் சூர்யாவும் பலரின் கனவு ஜோடி என்று சொல்வதை நிறுத்துங்கள். அவர்கள் ஒன்றும் அது போன்று கிடையாது. சூர்யாவின் கங்குவா படத்தை பற்றி படிப்பறிவே இல்லாத ஜோதிகா போன்ற ஒரு பெண் பேசுவதற்கு தகுதியே இல்லை.
சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே ஒன்று இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சூர்யாவுக்கு நடிப்பின் மீது எந்த விதமான ஆசையும் இல்லை, சூர்யா தனி ஜோதிகா தனி என்பதை உணருங்கள் நான் என்றும் சூர்யா பக்கம் தான்" என ஜோதிகா குறித்து மிக மோசமாக பேசியுள்ளார்.
Mudinchu 😂🤣 pic.twitter.com/HxhmNVDsc6
— ʲᵈᴀʟᴇxᴀɴᴅᴇʀᵗʷᵉᵉᵗˢ (@JDALEXtweets) November 18, 2024