கைதி 2வுக்கு ரெஸ்ட்!! Icon ஸ்டாரை வைத்து சம்பவம் செய்யப்போகும் லோகேஷ் கனகராஜ்..

Anirudh Ravichander Lokesh Kanagaraj Allu Arjun Cinema Update
By Edward Jan 14, 2026 12:30 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இந்திய அளவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கூலி படம் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. ஆனால், வசூலில் பட்டையை கிளப்பியது.

கூலி திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ வீடியோவை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

கைதி 2வுக்கு ரெஸ்ட்!! Icon ஸ்டாரை வைத்து சம்பவம் செய்யப்போகும் லோகேஷ் கனகராஜ்.. | Aa23 Allu Arjun Lokesh Kanagaraj Anirudh Combo

AA23

Icon ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் அவரின் 23வது படமாக உருவாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் எர்னானி, ரவி சங்கர் தயாரிப்பில் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார்.

படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டே தொடங்கவுள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு சுமார் ரூ. 75 கோடி சம்பளமாகவும் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.