சந்தானம் பட நடிகை ஆஞ்சல் சிங்கின் ஹனிமூன் புகைப்படங்கள்..
ஆஞ்சல் சிங்
2013ல் இலங்கையில் ஹீரோயினாக அறிமுகமாகி சினிமாவில் எண்ட்ரி கொடுத்து பிரபலமானவர் தான் நடிகை ஆஞ்சல் சிங். பாலிவுட் படங்களில் நடித்த ஆஞ்சல், சிபிராஜின் ஜாக்சன் துறை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.

அதன்பின் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பஞ்சாபி மொழிக்கு தாவிய ஆஞ்சல், 3 படங்களில் நடித்தப்பின் ஆளே காணாமல் போனார்.
இந்நிலையில் ஆஞ்சல் சிங் தன்னுடைய திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். ஒரு வாரத்திற்கு முன் அவருக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.

தற்போது திருமணம் முடிந்தநிலையில் தன்னுடைய கணவருடன் ஃபிரான்ஸ், கிரீஸ் நாடுகளுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு எடுத்த ஹனிமூன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பலரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.




