ரவி மோகனும் நானும் பிரிய 3வது நபர் தான் காரணம்!! விளக்கம் கொடுத்த ஆர்த்தி ரவி..

Divorce Tamil Actors Aarti Ravi Ravi Mohan
By Edward May 20, 2025 09:30 AM GMT
Report

ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து பெற வேண்டும் என்று கோரிய நிலையில், இந்த வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ரவி மோகனும் நானும் பிரிய 3வது நபர் தான் காரணம்!! விளக்கம் கொடுத்த ஆர்த்தி ரவி.. | Aarti Ravi Third Person Caused Marriage Breakup

இது ஒரு புறம் இருக்க, பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் காதலில் இருப்பதாக தொடர்ந்து தகவல் இணையத்தில் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால், இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என தொடர்ந்து விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

ஒரு பக்கம் ஆர்த்தி, அவர் பக்கம் உள்ள கருத்தை தெரிவித்து வரும் நிலையில், மறு பக்கம் அதற்கு ரவி மோகன் பதில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆர்த்தி ரவி அறிக்கை

இந்நிலையில், ஆர்த்தி ரவி மிகப்பெரிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தனக்கான உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். அதில், தன் கணவர் வெறும் காலோடு ஒன்றும் வீட்டைவிட்டு வெளியே போகவில்லை.

நன்றாக முன் கூட்டியே மிகத்தெளிவாக திட்டிமிட்டு, விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து, தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரில் தான் வீட்டைவிட்டுச் சென்றார்.

அவரை யாரும் துரத்தவில்லை, அவர் அமைதியாகவும் மிகுந்த நிதானத்தோடும் திட்டமிட்டு தான் வீட்டைவிட்டு வெளியேறினார் என்று மிகப்பெரிய அறிக்கை பதிவினை ஆர்த்தி ரவி பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery