லிப் லாக் காட்சியில் நடிக்கும் போது அந்த உணர்வு ஏற்படும்.. நடிகை ஆத்மிகா வெளிப்படை
Aathmika
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2017 -ம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான "மீசைய முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா.
முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இப்படத்தை தொடர்ந்து கோடியில் ஒருவன், கண்ணை நம்பாதே, காட்டேறி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஆத்மிகா பேட்டி அளித்த பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் சில திரைப்படங்களில் லிப் லாக் காட்சி இருப்பதால் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறேன்.
எனக்கு அது போன்ற காட்சிகளில் நடிக்க கஷ்டமாக இருக்கும். நான் எப்போதுமே சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஆசைப் படுகிறேன்" என்று ஆத்மிகா கூறியுள்ளார்.