என்னது எனக்கு கல்யாணமாகிடுச்சா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ் அபிராமி
மாடலிங் துறையில் இருந்து வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற்று பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி பிரபலமானவர் தான் நடிகை அபிராமி வெங்கடாசலம். நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமாபேகம் கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.
அதன்பின் பிக்பாஸ் 3 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் சீசன்களில் கலந்து கொண்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார். இதன்பின் ஆல்பம் பாடல் வெப் தொடர்கள், ஒருசில படங்கள் என்று பிஸியாக இருந்து வரும் அபிராமி கிளாமர் ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் தனியாக வீட்டில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்த அபிராமி மஞ்சள் கயிறில் கட்டப்பட்ட ஒரு கயிறை காமித்து புகைப்படத்தை பகிர்ந்தார். இதனை பலர் அபிராமிக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்ற செய்தியை பகிர்ந்து ஷாக் கொடுத்தனர்.
இதை கேள்விப்பட்ட அபிராமி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், காரடார் நோம்புக்கு, நோம்பு சரடு போட்டு போட்டோ போட்டது பெரிய தப்பா. எனக்கு புரியல, அதுக்குள்ள எனக்கு கல்யாணம் ஆச்சின்னு போடுறீங்களே, உங்களே தப்பா தெரியலையா?.
சிங்கிளா இருக்குன்னு தெரிஞ்சே வேறா யாரும் செட்டாகல, இந்த மீடியாக்காரங்களுக்கு மூளை அப்படியே இறங்கி முட்டிக்கு வந்துடிச்சா. என் அம்மாவிடம் இத சொன்னதுக்கு விழுந்து விழுந்து சிரிச்சிட்டாங்க. நோம்பு கயிறுக்கும் தாலிக்கயிறுக்கும் வித்தியாசம் தெரியாலையே, என் கிரஹகாரம் என்று திட்டி வீடியோவை பகிர்ந்திருக்கிறார் அபிராமி.
