இலட்சத்தை சுருட்ட என்ன பிளான் போட்ட! அபிஷேக்கிற்கு பிக்பாஸ் கொடுத்த சம்பளம் இவ்வளவு தான்!

Kamalhaasan Biggboss tamil5
By Edward Oct 25, 2021 10:53 AM GMT
Edward

Edward

Report

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே பெரிய டி.அர்.பியை கொடுத்து உலக தமிழ் மக்களை ஈர்த்து வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி. சில வாரங்களுக்கு முன் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வாங்கி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

சமீபத்தில் நாடியா சங் வெளியேறியதை அடுத்து மக்கள் ஓட்டு முக்கியம் என்ற நிலைப்பாடு போட்டியாளர்களிடையே தோன்றியதால் சுமுகமாக காய் நகர்த்தி வந்துள்ளனர். இந்நிலையில், யார் வெளியேறுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அனைவரையும் குழப்பதில் ஆழ்த்திய அபிஷேக் ராஜா எலிமினேட்டாகி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பளம் என்றும் 3 வாரத்திற்கு மொத்தம் எவ்வளவு வாங்கி சென்றார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஒரு வார சம்பளம் மட்டுமே ரூபாய் 1.75 லட்சம். ஆக மூன்று வாரங்கள் இவர் இந்த வீட்டிலிருந்து விளையாடி ரூபாய் 5.25 லட்சத்தோடு போட்டியிலிருந்து விடைபெறுகிறார்.

அபிஷேக் வெளியே சென்றதிலிருந்து ப்ரியங்கா, நிரூப் கூட்டணிக்குள் சலசலப்பு தொடங்கிவிட்டது. இது தொடருமா இல்லை வேறு ஒரு காங் சேருமா என்று பாப்போம்.