ராமராஜனை நளினி விவாகரத்து செய்ய இந்த நடிகை தான் காரணமா? உண்மையை உடைத்த விக்ரம் பட நடிகை
தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி 1999ல் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது சேது. விக்ரம் கேரியரில் மார்க்கெட்டை உயர்த்திய இப்படத்தின் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அபிதா. இப்படத்தில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதும் கிடைத்தது.
இதைதொடர்ந்து ஒரிசொல படங்களில் நடித்துள்ள அபிதா சின்னத்திரை சீரியல்களிலும் நடித்தார். திருமதி செல்வம் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஒளிப்பரப்பாகி வந்தது. தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் அபிதா, சுனில் என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயாகியும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ராமராஜனுடன் சீரிவரும் காளை என்ற படத்தில் அபிதா நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டனர்.
இதையறிந்த நளினி இதனால் தான் ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் என்ற செய்தியும் பரவ ஆரம்பித்தது. இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அபிதா, அப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது ஷூட் முடிந்தவுடனே நான் கேரவனுக்குள் சென்றுவிடுவேன்.

அப்படியிருக்கும் போது என்னால் தான் அவர்கள் விவாகரத்து காரணம் என்று பரப்பிவிட்டார்களே என்று வருத்தப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.