பிரபல நடிகையிடம் அத்துமீறி நடந்தாரா அர்ஜுன்!.. திரைக்குப்பின்னால் இப்படிப்பட்டவரா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஆக்ஷன் கிங் அருஜுன். தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் அர்ஜூனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் மேலும் லியோ படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.
திரைத்துறையில் பல ஹீரோ, ஹீரோயின்கள் குறித்து கிசுகிசுப்புகள் வெளிவந்துள்ளது. ஆனால் நடிகர் அர்ஜுன் இது போன்ற விஷயத்தில் சிக்கியதில்லை.
ஜெய்ஹிந்த், கர்ணா, பொம்மலாட்டம் படத்தில் அர்ஜுன் நடிகை ரஞ்சிதாவுடன் சேர்ந்து நடித்திருப்பார். அர்ஜுன் படப்பிடிப்பில் ரஞ்சிதாவிடம் தவறாக நடந்து கொண்டார் என்று செய்திகள் வெளிவந்து.
இந்நிலையில் இது பற்றி பேசிய பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "இந்த விஷயங்கள் முற்றிலும் பொய். அர்ஜுன் ரஞ்சிதாவிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை" என்று கூறியுள்ளார்.