விஜய் மகன் ஜேசன் இப்படி பட்டவர் தான்.. நடிகர் விக்ராந்த் சொன்ன ரகசியம்!

Vijay Tamil Cinema Tamil Actors
By Bhavya Nov 13, 2025 02:30 AM GMT
Report

விஜய்

எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ் சினிமாவில் தரமான இயக்குநராக வலம் வந்த போது தனது மகன் விஜய்யை நாயகனாக களமிறக்கினார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்குகிறார்.

இந்த நேரத்தில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான Sigma என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகன் சுதீப் நடிக்க படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

விஜய் மகன் ஜேசன் இப்படி பட்டவர் தான்.. நடிகர் விக்ராந்த் சொன்ன ரகசியம்! | Actor About Vijay Son Character

ரகசியம்!  

இந்நிலையில், சித்தப்பாவும், நடிகருமான விக்ராந்த் ஜேசன் சஞ்சய் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " ஜேசனிடம் எனக்கு மிகவும் பிடித்ததே அவருக்கு இயக்கம் பிடிக்கும் என்பதுதான். அவ்வளவு இடத்திலிருந்து அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தன, அது எனக்கே தெரியும்.

எதிர்காலத்தில் அவர் நடிக்கக்கூட செய்யலாம். ஆனால் இயக்குநர் தான் ஆவேன் என்று உறுதியாக நின்றார். அவருடைய அப்பா மிகப்பெரிய ஸ்டார். ஆனால், அப்பாவின் பெயரில் வளர கூடாது என்ற எண்ணத்தில் அவர் இருப்பது பெரிய விஷயம். அவர் மிகவும் நல்லவர். அமைதியாக இருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.  

விஜய் மகன் ஜேசன் இப்படி பட்டவர் தான்.. நடிகர் விக்ராந்த் சொன்ன ரகசியம்! | Actor About Vijay Son Character