அரவிந்த் சாமியின் நிஜ அப்பா யார் தெரியுமா?..வெளிவந்த சாக்லேட் பாயின் ரகசிய வாழ்க்கை

Arvind Swamy Actors Tamil Actors
By Dhiviyarajan Feb 13, 2024 05:19 AM GMT
Report

90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் அரவிந்த்சாமி. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து இந்திரா, ரோஜா, பாம்பே எனப் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக மாறினார். சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார். தற்போது அரவிந்த் சாமி சில படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் அரவிந்த் சாமி பிறந்த உடனேயே அவரது பெற்றோர்கள் தத்து கொடுத்துவிட்டனர் என்று சில வதந்திகள் வந்துகொண்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது அரவிந்த் சாமியின் நிஜ அப்பா யார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் சித்தி, மெட்டி ஒலி போன்ற சீரியல்களில் நடித்திருந்த டெல்லி குமார் தான் அரவிந்த் சாமியின் நிஜ அப்பா என்று கூறப்படுகிறது.

வீட்டில் எதாவது ஒரு விசேஷம் என்றால் மட்டும் அரவிந்த் சாமி வந்துவிட்டு போவார் அவ்வளவு தான் என்று டெல்லி குமார் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  

அரவிந்த் சாமியின் நிஜ அப்பா யார் தெரியுமா?..வெளிவந்த சாக்லேட் பாயின் ரகசிய வாழ்க்கை | Actor Arvind Swamy Real Dad