குக் வித் கோமாளி பிஜிலி ரமேஷ் மரணம்.. இதுதான் காரணம்..
Youtube
Gossip Today
Actors
Tamil Actors
By Jai
பிஜிலி ரமேஷ்
யூடியூப் சேனல்களில் நடித்து பிரபலமானவர் தற்போது திரைப்படங்களில் வாய்ப்பு பெற்று நடித்து வருகிறார்கள். அப்படி விஜே சித்து நடத்திய பிராங்க் வீடியோவில் கலந்து கொண்டு பிரபலமானார் பிஜிலி ரமேஷ்.
அப்படி பிரபலமான பிஜிலி ரமேஷ் கோமாளி, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி முதல் சீசனில் கோமாளியாக கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார் பிஜிலி ரமேஷ். சமீபகாலமாக அதிகமாக மது அருந்தியதால் கல்லீரல் பிரச்சனையால் நீண்ட நாட்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

இன்று அதிகாலை பிஜிலி ரமேஷ் (46) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.