26 வருட ரகசியம்! ரஜினிகாந்தின் இந்த படத்தில் முதலில் மம்மூட்டி நடிக்கவிருந்தாரா?
superstar
rajinikanth
Baashha
charanraj
mammotty
By Jai
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து உலக மக்களின் ஆதரவை பெற்று வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகளை பார்த்து கொண்டு வருகிறார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் 26 வருடத்திற்கு முன் வந்த பாஷா படத்தை பற்றிய ரகசியம் ஒன்றினை நடிகர் சரண் ராஜ் கூறியுள்ளார். பாஷா படத்தில் மாணிக் பாஷாவின் நண்பரான அன்வர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரண் ராஜ். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து அதுபற்றி பகிர்ந்துள்ளார்.
பாஷாவில் அன்வராக முதலில் மலையாள நடிகர் மம்மூட்டி நடிக்கவிருந்தது என ரஜினிகாந்தே தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மம்மூட்டி 1991ல் தளபதி படத்தில் நடித்திருந்ததால் என்னை நடிக்க கேட்டுக்கொண்டார் என்று 21 வருட ரகசியத்தை கூறியுள்ளார்.