விவாகரத்துக்கு பின் அந்த நடிகரை வலைத்துப் போட்ட ஐஸ்வர்யா!! அதே காரியத்தை செய்த தனுஷ்..
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக திகழ்ந்து நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். திருமணமாகி கணவரை வைத்து 3 படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.
விவாகரத்துக்கு பின்
அப்படத்தினை தொடர்ந்து சினிமாவில் ஒருசில வேலைகளில் கணவருக்கு உறுதுணையாக இருந்து வந்தார். அப்படியிருக்கும் நிலையில் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இரு மகன்கள் இருக்கும் போது இருவரும் பிரிவதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தனர். இருவரும் பிரிய பல காரணங்கள் கூறப்பட்டும் அதைப்பற்றி கவலைப்படாமல் தங்கள் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இதனைதொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தினை இயக்க பூஜை போட்டார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். தனுஷ் தன் இயக்கத்தில் ரஜினிகாந்தை இயக்கபோகும் கனவு மனைவியை பிரிந்ததால் அது தகர்ந்து போனது.
விஷ்ணு விஷால்
இந்நிலையில் எப்படியாவது ஐஸ்வர்யாவுக்கு போட்டிப்போட இயக்குனர் அவதாரத்தை தொடர்ந்துள்ளார். பா பாண்டி படத்தினை இயக்கியப்பின் பல ஆண்டுகள் கழித்து ஒரு படத்தினை இயக்கத்திட்டம் போட்டுள்ளார் தனுஷ். அதற்காக ஐஸ்வர்யா படத்தில் கமிட்டாகிய விஷ்ணு விஷாலை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம் தனுஷ். எஸ் ஜே சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர், வாத்தி போன்ற படங்களுக்கு பின் இப்படத்தினை தனுஷ் துவங்குவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.