போலீசிடம் கதறிய நடிகர் கஞ்சா கருப்பு.. நடந்தது என்ன

Actors Ganja Karuppu
By Kathick Jan 26, 2025 03:30 AM GMT
Report

நடிகர் கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். களவாணி, நாடோடிகள் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்ளின் மனதை கவர்ந்தார்.

சென்னை மதுரவாயல் பகுதியில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு 2021ல் இருந்து ஒரு வேட்டை 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகை எடுத்து தங்கி இருக்கிறார். இந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் தற்போது போலீஸில் ஒரு புகார் அளித்துள்ளார்.

போலீசிடம் கதறிய நடிகர் கஞ்சா கருப்பு.. நடந்தது என்ன | Actor Ganja Karuppu Rental House Issue

நடிகர் கஞ்சா கருப்பு தனக்கு ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி வைத்து இருக்கிறார் என்றும், வீட்டை உள்வாடகைக்கு விட்டுள்ளார் என்றும் குடி, மற்ற விஷயங்கள் என தனது வீட்டை லாட்ஜ் போல் மாற்றிவிட்டார் புகாரில் கூறியுள்ளார். இதை கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு, தான் தங்கி இருந்த வாடகை வீட்டிற்கு போலீஸுடன் சென்று பார்த்தபோது அங்கு பொருட்கள் சேதமாகி இருப்பதாக கூறி கதறியுள்ளார். மேலும் தனது கலைமாமணி விருதையும் காணவில்லை, ரூ. 1.5 லட்சத்தையும் காணவில்லை என கூறி போலீசிடம் கதறியுள்ளாராம். இந்த வீட்டின் உரிமையாளர்தான் பொருட்களை சேதமாக்கி இருக்கிறார் என கஞ்சா கருப்பு புகார் அளித்துள்ளார்.