நடிகர் மாதவன் 21 நாட்களில் உடல் எடையை ஜிம் போகாமல் குறைத்தது எப்படி?
Madhavan
By Yathrika
மாதவன்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். அலைபாயுதே, மின்னலே போன்ற படங்கள் மூலம் பெண் ரசிகைகளின் மனதை கொள்ளை கொண்டவர் அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
ஆனால் தொடர்ந்து சில படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்காமல் போக படங்கள் அவ்வளவாக நடிக்காமல் இருந்தவர் இப்போது மாஸ் காட்டி வருகிறார்.
சமீபத்தில் ஜிம், உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைத்தது குறித்து பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர், உணவை நன்றாக மென்று ரசித்து சாப்பிடுவேன், 40 முதல் 60 முறை தண்ணீர் குடிப்பேன்.
மாலை 6.45 மணிக்குள் சமைத்த உணவை சாப்பிடுவேன், அதிகாலை 90 நிமிடமும், தூங்குவதற்கு முன்னும் நடைபயிற்சி செய்வேன், இயற்கையான உணவு, பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துக்கொண்டு 21 நாட்களில் உடல் எடையை குறைத்ததாக தெரிவித்துள்ளார்.