முத்தக்காட்சிக்கு15 முறை டேக் எடுத்த நகுல்.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்..
அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் வாஸ்கோடகாமா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் நகுல் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த், ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம், ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு, படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மணிகண்டன், பாய்ஸ் படத்தில் எனக்கும் நகுலுக்கும் எடுத்த முதல் காட்சியே முத்த காட்சிதான். அதுவும் சாதாரண முத்தம் கிடையாது உதட்டோடு உதட்டில் கொடுக்கும் முத்தம்.
அந்த காட்சி எடுக்கும் போது, 15 டேக்கு மேல் போனது. அந்த ஷாட் நன்றாக வரவேண்டும் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டார். அதை எல்லாம் சகித்துக் கொண்டு முகம் சுளிக்காமல் அந்த காட்சியில் நடித்தோம் என்று மணிகண்டன் கூறியுள்ளார்.