மகன்களுக்காக 12 வருடமாக அமெரிக்காவில் செட்டிலாகிய நெப்போலியன்!! மிரளவைக்கும் பிரம்மாண்ட வீடு
Viral Video
By Edward
தமிழ் சினிமாவில் முரட்டு வில்லனாக 80, 90காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் நெப்போலியன். கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் வில்லனாக இருந்தும் கதாநாயகனாக முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்து வந்தார்.
கடந்த ஜெயசுதா என்பவரை திருமணம் செய்த நெப்போலியன் தனூஷ், குணா என்ற இரு மகன்களை பெற்றெடுத்தார். முதல் மகன் தனூஷ் உடல் அளவில் சில பிரச்சனைகள் இருந்ததால் சிகிச்சைக்காக 12 வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவுக்கு சென்றார்.
அங்கு 6 வருடங்களுக்கு முன் மகன்களுக்காக புதிய வீட்டினை வாங்கி வாழ்ந்து வருகிறார்.
தொழிலதிபராகவும் அமெரிக்க நடிகராகவும் திகழ்ந்து கிடைக்கும் நேரத்தில் மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது நெப்போலியன் அமெரிக்காவில் இருக்கும் பிரம்மாண்ட வீட்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.