84 ஏக்கர் நிலம்.. மூச்சு முட்டவைக்கும் சம்பளம்!! பாகுபலி நாயகன் பிராபாஸின் சொத்து மதிப்பு..

Baahubali: The Beginning Actors Prabhas Kalki 2898 AD Net worth
By Edward Oct 23, 2024 05:30 AM GMT
Edward

Edward

in Celebrity
Report

நடிகர் பிரபாஸ்

இந்திய சினிமா என்றால் பாலிவுட் சினிமா மட்டும் தான் என்ற நிலை மாறி தற்போது தென்னிந்திய சினிமாக்கள் அதை உடைத்து பான் இந்தியன் படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அப்படி பான் இந்தியன் ஹீரோவாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் நடிகர் பிரபாஸ்.

84 ஏக்கர் நிலம்.. மூச்சு முட்டவைக்கும் சம்பளம்!! பாகுபலி நாயகன் பிராபாஸின் சொத்து மதிப்பு.. | Actor Prabhas 45Th Birthday Salary And Net Worth

22 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் வெறும் 23 படங்களில் நடித்துள்ள பிரபாஸ் தெலுங்கு சினிமாத்துறையில் இருந்து இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார்.

அப்படி அவர் நடிப்பில் வெளியான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் தலா 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து கல்கி 2898 ஏடி படம் கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படத்தது. இதனை தொடர்ந்து கல்கி படத்தின் இரண்டாம் பாகம் 2026ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் இன்று தன்னுடைய 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

84 ஏக்கர் நிலம்.. மூச்சு முட்டவைக்கும் சம்பளம்!! பாகுபலி நாயகன் பிராபாஸின் சொத்து மதிப்பு.. | Actor Prabhas 45Th Birthday Salary And Net Worth

ஒரு படத்திற்கு பிரபாஸ் ரூபாய் 100 கோடியில் இருந்து 200 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. அப்படி அவர் நடித்து சுமார் 240 கோடிகளுக்கும் மேல் சொத்து சேர்த்து வைத்திருக்கிறாராம்.

பிரபாஸிடம் 84 ஏக்கர் நிலமும் 60 கோடிகள் மதிப்பில் ஒரு ஆடம்பர பங்களாவும் வைத்திருக்கிறார். அந்த பங்களாவில் நீச்சல் குளம், நவீன ஜிம், மிகவும் ஆடம்பரமான அறைகள் உள்ளதாம். இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், ஒரு ஜாக்குவார், பிஎம்டபிள்யூ, இரு மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட கார்களும் இருக்கிறதாம்.