நடிகை தமன்னாவுடன் டேட்டிங் போக பிரமோஸ் செய்த நடிகர்!! ஷாக்கான ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் கேடி, வியாபாரி, கல்லூரி போன்ற சிறு பட்ஜெட் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தமன்னா. வட இந்திய பெண்ணாக தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஆரம்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
தமன்னா
ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக நடித்து வந்த தமன்னா கிளாமரில் பட்டையை கிளப்பி நடிக்க ஆரம்பித்தார்.
முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்த தமன்னா தற்போது பாலிவுட் பக்கம் வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
சமீபத்தில் பிளான் ஏ பிளான் பி என்ற படத்தில் ரித்தேஷுடன் படுக்கையறை காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார். இந்நிலையில் தெலுங்கில் Gurthunda Seethakalam என்ற படத்தில் நடித்துள்ளார் தமன்னா.
டேட்டிங்
வரும் 9ன் ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது.
அப்போது அப்படத்தின் கதாநாயகன் நடிகர் Adivi Sesh தமன்னாவை பிரபோஸ் செய்துள்ளார். நீங்க மில்கி நானும் சில்கி என்று கூறி டேட்டிங் போக கேட்டுள்ளார்.
இதற்கு தமன்னா விழுந்து விழந்து சிரித்து என்ன சொல்வது என்று முழித்துள்ளார்.