ரொம்ப சின்ன பொண்ணு, இவுங்க கூட எப்படி?.. மீனாவுடன் கைகோர்க்க அடம்பிடித்த அப்பா வயது நடிகர்
90 களில் இளைஞர்களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் ராஜ்கிரண் நடிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த "என் ராசாவின் மனசிலே" படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் போது மீனாவுக்கு வயது 15 தானாம். தற்போது மீனா தமிழில் ரவுடி பேபி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மீனா குறித்து பேசிய ராஜ்கிரண் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், என் ராசாவின் மனசிலே என்ற படத்திற்கு ஹீரோயின் தேடிக்கொண்டிருக்கும்போது, ஒரு பத்திரிகையில் மீனாவின் போட்டோவை பார்த்தேன்.
இதையடுத்து நான் கஸ்தூரி ராஜாவிடம் சென்று இந்த பொண்ணு படத்தின் கதாநாயகிக்கு பொருத்தமாக இருப்பார் என்று சொன்னேன்.
அதற்கு கஸ்தூரி ராஜா சார் ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா என்று சொன்னார். நான் அதற்கு, இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சோழையம்மா கதாபாத்திரத்திற்கு மீனா தான் சரியாக இருப்பார் என்று கூறினேன்.
கடைசியில் அந்த படத்தில் மீனா நடித்து மிக பெரிய வெற்றி பெற்றது என்று ராஜ்கிரண் கூறியுள்ளார்.