அடேங்கப்பா நடிகர் ரவி மோகன் சமீபத்தில் அணிந்து வந்த வாட்ச் இத்தனை லட்சமா?

Tamil Cinema Ravi Mohan
By Yathrika May 12, 2025 06:30 AM GMT
Report

ரவி மோகன்

தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர்களில் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் இருந்து வந்தவர் ஜெயம் ரவி. படங்களை பற்றிய செய்திகள் மட்டுமே வந்து கொண்டிருந்தது.

ஆனால் கடந்த வருடத்தில் இருந்து இவரது பட செய்திகளுக்கு பதிலாக சொந்த விஷயத்தின் செய்திகள் தான் அதிகம் வலம் வருகிறது.

மனைவியுடன் விவாகரத்து அறிவிப்பு, பெயரை ரவி மோகன் என மாற்றியது, கம்பெனியை மும்பைக்கு மாற்றியது என நிறைய மாற்றங்கள்.

அடேங்கப்பா நடிகர் ரவி மோகன் சமீபத்தில் அணிந்து வந்த வாட்ச் இத்தனை லட்சமா? | Actor Ravi Mohan Watch Price Details

சமீபத்தில் இவர் கிசுகிசுக்கப்பட்ட பாடகி கெனிஷாவுடன் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வர பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது ரவி மோகன் அந்த திருமண விழாவிற்கு அணிந்துவந்த வாட்ச் விலை குறித்த தகவல் தான் இப்போது பேசப்படுகிறது. 

அவர் Longines Conquest Chronograph என்ற வாட்ச் அணிந்து வந்துள்ளார், இதன்விலை ரூ. 3 லட்சம் என கூறப்படுகிறது.