தலைக்கனத்தில் வளரவிடாமல் தடுத்து வடிவேலு!! கால்மேல் காலை போட்டு பழித்தீர்த்த நடிகர்..
தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலு, பல ஆண்டுகள் கழித்து ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தந்தையாக மாமன்னன் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனை தொடர்ந்து சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வரும் வடிவேலு ஆரம்பகாலக்கட்டத்தில் தன்னுடன் நடித்த சக நடிகர்களை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். அதிலும் அவருடன் பல காட்சிகளில் நடித்தவர்கள் கூட வடிவேலு தங்களை வளரவிடாமல் தடுத்தவர் என்று விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் காதல் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் காதல் சுகுமார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு வடிவேலு செய்த மோசமான காரியத்தை பகிர்ந்துள்ளார். என்னை சந்தித்து பாராட்டியும் தன்னை ஆல் வைத்து அடித்து ஓடவிட்டார் என்றும் பகிர்ந்திருந்தார்.
தற்போது வடிவேலுவை சந்தித்த போது பழித்தீர்த்தேன் என்று தெரிவித்துள்ளார். ஏவிஎம் தியேட்டரில், சிங்கம் கலமிறங்கிடுச்சி என்ற காட்சி வடிவேலு நடித்திருந்தார்.
ஷூட் முடிந்து என்னை தாண்டி சென்ற போது எல்லோரும் எந்திரிச்சாங்க, நான் மட்டும் கால் மேல் காலை போட்டு பழித்தீர்த்தேன்.
என்னை பார்த்த அப்படியே அந்த பக்கம் சென்றுவிட்டார். அந்த 4 படத்துல போஸ்டர்லயும் என் போட்டோ இருந்துச்சி என்று காதல் சுகுமார் கூறியிருக்கிறார்.