தாலியை அடமானம் வெச்சு ஆபரேஷன் பண்ணாங்க!! மறைந்த சேதுவின் மனைவி எமோஷ்னல்..
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் சேது. மருத்துவராக பணியாற்றிய சேது இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் இறந்து 5 ஆண்டுகளாகவிட்ட நிலையில், சேதுவின் மனைவி உமா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் உருக்கமாக பேசியுள்ளார்.
மனைவி உமா
அவர் இறந்துவிட்டதாக சொல்கிறார்கள், ஆனால் என்னுடன் எல்லாவற்றிலும் கலந்து இருக்கிறார். அவர் ஆரம்பித்து வைத்த கிளினிக், நாங்கள் வாழும் வீடு என அனைத்திலும் இருக்கிறார். மகன் வேதாந்த், மகள் சஹானா ஆகிய இருவரின் எதிர்காலமும் என் கையில் இருக்கிறது.
அவர்கள் முன் நான் சோகமாக இல்லாதது போல் நடித்தாலும் தெரிந்துவிடும், குழந்தைகள் முன் அப்படி நடித்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு பொய்யான வாழ்க்கையை கொடுத்துவிட்டோம் என்ற எண்ணம் வந்துவிடும். அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது தான் என் கடமை. கிளினிக் போகும் போது சேது என்னையும் கூட்டிச்செல்வார்.
அப்படி ஒருநாள் நடந்த நிகழ்வை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. ஒரு பேஷண்ட்டுக்கு ஆபரேஷ் பண்ணும்போது தாலியை அடமானம் வைத்து ஃபீஸ் கட்டியதை சேது தெரிந்து கொண்டார்.
உடனே அவங்க கொடுத்த காசு வேண்டாம் என்று சொல்லி அந்த தாலியை மீட்டு கழுத்துல போட்ட்உ அவர்கலுக்கு உதவியா 5 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அனுப்பினாரு. சேதுவை பார்த்து பல இடங்களில் பிரமித்துப்போனேன். மருத்துவராக மட்டுமில்லாமல் சேவை மனப்பான்மையோடு இருப்பது வியக்க வைத்ததாக சேதுவின் மனைவி உமா தெரிவித்துள்ளார்.