ஒரே நாளில் 500 மிரட்டல்கள்! நடிகர் சித்தார்த்தின் குடும்பத்திற்கு டிவிட்டரால் வந்த சோதனை..

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சித்தார்த். நடிப்பை தவிர சமுக அக்கரை பிரச்சனைகளை இணையத்தில் கூறியும் களத்தில் இறங்கியும் பணியாற்றி வருகிறார்.

தற்போது கொரானா நாட்கள் என்பதால் சில தினங்களுக்கு முன் உத்திர பிரதேச முதல்வர் ஜோகி ஆதித்யநாத்தை குறித்து சர்ச்சையாக டிவிட்டர் ஒன்றினை பதிவிட்டிருந்தார். இதை கண்டித்து பலர் விமர்சனம் கூறியும் கருத்துக்களை தெரிவித்தும் வந்தனர்.

தற்போது தன்னுடைய மொபைல் நம்பரை பாஜகவின் ஐடி பிரிவினர் வெளியிட்டதால் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மிரட்ட அதுவும் கொலை மிரட்டல்கள் வருவதாக கூறியுள்ளார்.

என் மொபைல் நம்பர் லீக்கானதாக் பிஜேபி தரப்பில் இருந்து சுமார் 500 கால்கள் ஆபாசமாகவும் ரேப் மற்றும் கொலை மிரட்டல்கள் வந்தது. அதன் அதிகார ரெக்கார்ட்டிங்கள் அனைத்தும் காவல் துறை வசம் ஒப்படைக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

[O7VQTC ]ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்