விஜய்யின் தவெக குறித்து கேள்வி.. இணையத்தில் வைரலாகும் நடிகர் சூரியின் பதில்
சூரி
நகைச்சுவை நடிகராக பிரபலமாகி, இன்று கதாநாயகனாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் சூரி. இவர் நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் மாமன்.
எமோஷ்னல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் விலங்கு என்ற சூப்பர்ஹிட் வெப் சீரிஸ் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாலசரவணன் என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.
சூரியின் பதில்
படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சூரி நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்தியாளர் ஒருவர் தவெக தலைவர் விஜய் அழைத்தால் பிரசாரத்திற்கு செல்வீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சூரி, "அண்ணன் சரியாக போய் கொண்டிருக்கிறார். ஆனால் எனக்கு படத்தின் பணிகள் உள்ளது." என்று கூறியுள்ளார்.