நடிகர் ஸ்ரீ-யின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? குடும்பத்தினர் அறிக்கை..

Lokesh Kanagaraj Actors Tamil Actors
By Edward Apr 18, 2025 05:30 AM GMT
Report

நடிகர் ஸ்ரீ (ஸ்ரீராம்)

தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆடுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ (ஸ்ரீராம்). இப்படங்களை தொடர்ந்து வாய்ப்பில்லாமல் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஸ்ரீ.

அதன்பின் சில நாட்களில் வெளியேறிய ஸ்ரீ, 2023ல் வெளியான இறுகப்பற்று என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். சமீபகாலமாக அவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பாக பேசப்பட்டு வந்தநிலையில், பலரும் பலவிதமாக ஸ்ரீ பற்றி பேசி வந்தனர்.

நடிகர் ஸ்ரீ-யின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? குடும்பத்தினர் அறிக்கை.. | Actor Sri Recent Medical Treatment Statement Viral

இந்நிலையில் ஸ்ரீ பற்றி அவரது குடும்பத்தினர் ஒரு மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், ஸ்ரீ மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கிறார். அவர்களின் ஆலோசனைகளின்படி சமூகவலைத்தளங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

மேலும் ஸ்ரீயின் உடல் நிலை பற்றி பரவும் தவறான செய்திகளும், ஊகங்களும் மிகவும் தங்களுக்கு வருத்தமளிப்பதாகவும் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்புவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த அறிக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜும் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Gallery