காதலிச்சு ஏமாத்தி இருக்காங்க!! சிம்பு என்ன இப்படி சொல்லிட்டாரு.. ஷாக்கிங் நியூஸ்
சிம்பு
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆவணப்படமாக ரிலீஸ் செய்து இருக்கின்றனர்.
அதில் நானும் ரௌடி தான் பட காட்சிகள் மற்றும் பாடல்களை பயன்படுத்த அனுமதி கேட்டு நயன்தாரா தரப்பு நடிகர் தனுஷை அணுகிய நிலையில், இரண்டு வருடமாக அவர் அதை தராமல் மறுத்து வந்திருக்கிறார்.
அதை குறிப்பிட்டு நயன்தாரா வெளியிட்ட கடிதம் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல போராட்டங்களுக்கு பின் இந்த ஆவணப்படம் வெளிவந்தது.
இதில், நயன்தாரா அவருடைய குடும்பம், காதல் தோல்வி, திருமணம் என எல்லாவற்றையும் குறித்து அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
ஷாக்கிங் நியூஸ்
இந்நிலையில், நடிகர் சிம்பு காதல் குறித்தும் காதல் தோல்வி குறித்தும் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அதில், " காதலித்து ஏமாறவில்லை, நான் காதலித்தவர்கள் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். அவர்கள் அப்படி தான் என்று தெரிந்தும் நான் காதலித்து ஏமாந்தேன்.
அதற்காக நான் அவர்களை குறை கூறமாட்டேன். அவர்கள் கொடுத்த வலி தான் இன்று நான் வெற்றி பெற காரணமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.